ஜார்ஜியா ரெட்மைன் 74, பிரென்டர்கஸ்ட் 52..மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்திய பிரிஸ்பேன் ஹீட்
Brisbane heat women beat melbourne stars: WBBL டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
WBBL டி20 போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
ஏமி ஜோன்ஸ் 74
ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடந்த WBBL டி20 போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
ஏமி ஜோன்ஸ் 74 (52) ஓட்டங்களும், அணித்தலைவர் மெக் லானிங் (Meg Lanning) 52 (45) ஓட்டங்களும் விளாசினார். சியான்னா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஜார்ஜியா ரெட்மைன்
பின்னர் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ஜார்ஜியா ரெட்மைன் (Georgia Redmayne) 74 (50) ஓட்டங்களும், ஓர்லா பிரென்டர்கஸ்ட் 52 (36) ஓட்டங்களும் விளாசினர்.

