பிக் பாஷ் லீக்: மீண்டெழுந்த பிரிஸ்பேன்..மேக்ஸ்வெல் அணிக்கு விழுந்த அடி
பிக் பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது.
ஸ்டோய்னிஸ் 43 ஓட்டங்கள்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் போட்டி தி காபா மைதானத்தில் நடந்தது.
21-year-old Tom Balkin is back in the wickets at The Gabba! #BBL15 pic.twitter.com/6gPBzsBVLJ
— KFC Big Bash League (@BBL) January 2, 2026
முதலில் களமிறங்கிய மெல்போர்ன் அணியில் ஸ்டோய்னிஸ் 43 (35) ஓட்டங்களும், மேக்டொனால்ட் 37 (12) ஓட்டங்களும், ஹார்பர் 37 (23) ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் அந்த அணி 195 ஓட்டங்கள் குவித்தது. பல்கின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் நாதன் மெக்ஸ்வீணி 43 ஓட்டங்களும், மேட் ரென்ஷா 41 (27) ஓட்டங்களும் விளாசினர்.
What a take that is 😳
— KFC Big Bash League (@BBL) January 2, 2026
Glenn Maxwell is out after Jimmy Peirson took this spectacular catch at The Gabba! #BBL15 #GoldenMoment @BKTtires pic.twitter.com/tx5XRcXKBV
அபார வெற்றி
மேக்ஸ் பிரையண்ட், பார்ட்லெட் அதிரடியில் மிரட்ட பிரிஸ்பேன் அணி 19.4 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற பிரையண்ட் (Bryant) 48 (26) ஓட்டங்களும், பார்ட்லெட் 21 (9) ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான படுதோல்விக்கு பின் பிரிஸ்பேன் ஹீட் மீண்டெழுந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |