பிரித்தானியாவில் சந்தேகத்திற்குரிய வீட்டு வெடிப்பு சம்பவம்: இருவர் உயிரிழந்ததால் பரபரப்பு
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வெடிப்பு சம்பவம்
பிரித்தானியாவின் Sterncourt சாலையில் இன்று காலை 6.17 மணிக்கு குறிப்பிட்ட வீடு ஒன்றில் இருந்து குடும்ப தகராறு தொடர்பான புகார் காவல்துறைக்கு வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டை அடைவதற்குள், அங்கு மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்தது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டிலிருந்த மற்றொரு ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தை என மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக Avon and Somerset காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்குரிய வெடிப்பு
இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவத்தை பொலிஸார் சந்தேகத்திற்குரிய சம்பவமாக கருதி விசாரித்து வருகின்றனர்.
மேலும் இதில் வெளியாட்கள் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்றும், வேறு யாரையும் தேடவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |