சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பிரித்தானிய ராணுவ வீரர்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சகம்
British Army Soldiers Yudhisingh Jussun died in road accident: இளம் பிரித்தானிய ராணுவ வீரர் யுதிசிங் ஜூஸ்சன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய ராணுவ வீரர் உயிரிழப்பு
பிரித்தானிய ராணுவத்தின் பழமைவாய்ந்த பிரிவுகளில் ஒன்றான தி ப்ளூஸ் அண்ட் ராயல்ஸ்(The Blues and Royals) படை பிரிவில் பணியாற்றி வந்த 22 வயது இளம் ராணுவ வீரர் யுதிசிங் ஜுஸ்சன்(Yudhisingh Jussun) சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மொரீஷியஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட யுதிசிங் அக்டோபர் 14ம் திகதி நடந்த மோசமான சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அன்போடு யுதி என்று அழைக்கப்படும் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய ராணுவத்தில் இணைந்துள்ளார்.
குறுகிய காலத்திலேயே சிறந்த குதிரை ஏற்ற வீரராக தன்னை செதுக்கிக் கொண்ட யுதிசிங், தன்னுடைய சேவை காலத்தில் ட்ரூப்பிங் தி கலர் என்ற அரச அணிவகுப்பு நிகழ்ச்சியில் இரண்டு முறை கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் லண்டன் ஹைட் பார்க் பேராக்ஸில் உள்ள மன்னரின் பாதுகாப்பு படைபிரிவிலும் யுதிசிங் பங்காற்றியுள்ளார்.
குவியும் இரங்கல்கள்
இந்நிலையில் யுதிசிங் மறைவை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

யுதிசிங் மறைவு குறித்து அவரது கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பெஞ்சமின் மெக்னீஸ், தங்களின் படைப்பிரிவின் சிறந்த வீரரை இழந்து இருப்பதாக குறிப்பிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மறைவுக்கு ராணுவ வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.