வெளிநாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய தேனிலவு தம்பதி: வெளியான முதல் புகைப்படம்
உகாண்டாவில் தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பயங்கரவாதக் குழுவால்
டேவிட் மற்றும் செலியா பார்லோ தமபதி தங்கள் திருமணத்தை கொண்டாடுவதற்காக கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image: Sax Rohmer Ltd
இதன் பின்னர் அவர்களது வாகனத்தையும் அந்த குழு தீ வைத்து எரித்துள்ளனர். இவர்களுடன் சென்ற 40 வயதான வழிகாட்டியும் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக உகாண்டா பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளால் ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களின் எரிக்கப்பட்ட சஃபாரி வாகனத்தின் பதறவைக்கும் படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
@rex
சுற்றுலாப் பயணிகள்
உகாண்டா பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில், தாக்குதல் சம்பவமானது அக்டோபர் 17 அன்று மாலை 6 மணியளவில் கட்வே-கபதூரோ முர்ரம் சாலையில் நடந்துள்ளது.
ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உகாண்டா நாட்டவர் மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@facebook
சம்பவயிடத்திலேயே மூவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |