29,000 வைரங்களை நன்கொடையாகக் கொடுத்த பிரித்தானியர்: சுவாரஸ்யப் பின்னணி
Dr.Jeffrey W. Harris and his wife, Francesca Harris donate thousands of diamonds for research: ஜெஃப்ரி ஹாரிஸ் என்பவரும், அவரது மனைவியான ஃப்ரான்செஸ்கா ஹாரிஸும் ஆராய்ச்சிக்காக ஆயிரக்கணக்கான வைரங்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.
ஒரு பிரித்தானிய தம்பதியர், சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான வைரங்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள்.
சுவாரஸ்யப் பின்னணி
பிரித்தானியரான ஜெஃப்ரி W. ஹாரிஸ் என்பவரும், அவரது மனைவியான ஃப்ரான்செஸ்கா ஹாரிஸும், Bern பல்கலைக்கழகத்துக்கு 29,000க்கும் அதிகமான வைரங்களைக் கொடுத்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இந்த ஹாரிஸ், புவியியல் மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.
லண்டனிலுள்ள Diamond Trading Company (DTC) என்னும் நிறுவனம், பூமியின் பரிணாமம் தொடர்பான ஆய்வுகளுக்காக, பாலிஷ் செய்யப்படாத 29,000 வைரங்களை ஆராய்ச்சியாளரான ஜெஃப்ரிக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தது.
அதனால், ஆய்வுக்காகவும், கற்பிக்கும் நோக்கத்துக்காகவும் மிகப்பெரிய வைர சேமிப்பை வைத்திருக்கும் நபர் என்ற பெருமை ஹாரிஸுக்குக் கிடைத்தது.
அந்த வைரங்களைத்தான் தற்போது Bern பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக கொடுத்துள்ளார் ஹாரிஸ்.

அதாவது, வைரங்கள் என்பவை வெறும் ஆடம்பர நகைகளில் பொருத்தப்படும் விலையுயர்ந்த கற்கள் மட்டுமல்ல. அவை, பூமி குறித்த அறிவையும் வரலாற்றையும் தங்களுக்குள் வைத்திருக்கும் இயற்கை ஆவணக் காப்பகங்கள் ஆகும்.
இந்த வைரங்கள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓஷனியா ஆகிய இடங்களிலிருந்து வந்தவை ஆகும்.
இந்த வைரங்களுக்குள் உயர் அடர்த்தி திரவம், உருகிய தாதுக்கள் போன்ற அரிய விடயங்கள் இருக்கும். அவற்றை வைத்து, பூமியின் பரிணாமம் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்வார்கள்.
இந்த வைரங்களில் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவையும் உள்ளன, 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான வைரங்களும் உள்ளன.