பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: புதிய தகவல்
பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண் வழக்கில், கொலையாளி இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரது மரணம் குறித்த புதிய தகவல் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு
ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த கேரன் கார்ட்டர் (Karen Carter, 65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
புதிய தகவல்
விடயம் என்னவென்றால், இந்த சம்பவம் நிகழ்ந்து இத்தனை மாதங்கள் ஆகியும், இதுவரை குற்றவாளி சிக்கவில்லை.

சொல்லப்போனால், கொலையாளி யார் என்பதையே கண்டுபிடிக்கமுடியவில்லை.
உள்ளூரில், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் என, நகர மேயர் உட்பட 15 பேரின் DNA சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டாயிற்று.

என்றாலும், எதுவுமே குற்றவாளியின் DNAவுடன் பொருந்தவில்லை.
ஆகவே, இந்த கொடூர குற்றத்தைச் செய்தவர் நிச்சயம் உள்ளூர்க்காரர் அல்ல, யாரோ வெளியூர் நபர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு பொலிசார் வந்துள்ளார்கள்.
ஆக, கேரன் கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |