உக்ரைன் அகதி காதலிக்காக குடும்பத்தை கைவிட்ட பிரித்தானியருக்கு அடுத்த நெருக்கடி: வீடு புகுந்து கைது
உக்ரைன் அகதி காதலிக்காக தமது இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கைவிட்ட பிரித்தானிய தந்தையை பொலிசார் வீடு புகுந்து கைது செய்துள்ளனர்.
ஆக்ரோஷமான கருத்து மோதல்
உக்ரேனிய காதலியுடன் ஏற்பட்ட ஆக்ரோஷமான கருத்து மோதல் அவரை கைது செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது. டோனி கார்னெட் நேற்று இரவு பிராட்போர்ட் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
@nbpress
அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 வயதான டோனி கார்னெட் பிராட்போர்ட் காவல் நிலையத்தில் சில மணி நேரம் சிறைவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
கார்னெட் தனது காதலி சோபியா கர்கடிமுடன் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து திடீரென்று கத்திப்பேசும் சத்தம் கேட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தமது மகள்கள் இருவருடனும் நேரம் செலவிட்ட நிலையிலேயே கார்னெட் காரசாரமாக கருத்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பொலிசார் சம்பவயிடத்திற்கு வந்து சேரும்போதும் நிலைமை தீவிரமாக இருந்தது எனவும், அதனாலையே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் சிறை
ஆனால், சுமார் 6 மணி நேரம் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட பின்னர் பொலிசார் அவரை விடுவித்துள்ளனர். உக்ரேனிய காதலியுடன் பிரிந்து மீண்டும் தமது குடும்பத்திற்கு திரும்பிய கார்னெட், திடீரென்று மீண்டும் உக்ரேனிய காதலியை நாடிச் சென்றார்.
தற்போது இருவரும் ஒன்றாகவே பிராட்போர்ட் பகுதியில் வசித்து வருகின்றனர். டோனி கார்னெட் தமது மகள்கள் மீது கொள்ளை பாசம் வைத்திருப்பதும் இந்த தம்பதியிடையே சிக்கலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
@nbpress
ஆனால், சோபியா அதை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார் எனவும் கூறுகின்றனர். மட்டுமின்றி, டோனியுடன் தமக்கு பிள்ளைகள் வேண்டும் என அவர் ஆசைப்படுவதாகவும், டோனி ஏற்கனவே கருத்தடை தொடர்பான அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.