குடும்பத்துடன் சுற்றுலா... பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் சிக்கிய பிரித்தானிய சிறுமி
பிரான்சில் புலம்பெயர் நபர் ஒருவரின் கொலைவெறி தாக்குதலில் சிக்கியவர்களில் 3 வயது பிரித்தானிய சிறுமியும் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியரான 3 வயது சிறுமி
பிரான்சில் நேற்று நடந்த கத்திக்குத்து கொலைவெறி தாக்குதலில் நான்கு சிறார்களும் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் பிரித்தானியரான 3 வயது சிறுமி.
@thesun
உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் பாதிக்கப்பட்ட சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த துரித சிகிச்சையினால் ஆபத்து கட்டத்தை கடந்ததாக தகவல் வெளியானது.
பிரான்சில் குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் தான் பிரித்தானிய சிறுமி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றே நம்பப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் கிரெனோபில் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கிய இன்னொரு சிறார் பிறந்து 22 மாதங்களேயான நெதர்லாந்து நாட்டவர் என தெரியவந்துள்ளது. எஞ்சிய இருவர் பிரான்ஸ் நாட்டு சிறார்கள் எனவும், அவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
@thesun
கிறிஸ்துவின் பெயரால் என கத்தியபடியே
ஆனால் தாக்குதலில் இலக்கான இரு பெரியவர்கள் 70 மற்றும் 78 வயதுடையவர்கள் எனவும், தங்கள் பேரப்பிள்ளைகளை கவனித்து வந்தவர்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் கிறிஸ்துவின் பெயரால் என கத்தியபடியே கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிரியா புலம்பெயர் நபர் எனவும் அவரது பெயர் அப்தல் மாசிஹ் எனவும் 31 வயது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
@thesun
மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்தல் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே, பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில், பிரித்தானிய சிறார் ஒருவரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மேக்ரானுடன் தொடர்பில் இருப்பதாகவும், எந்த உதவியும் செய்ய தயார் என உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் சுனக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் கோழைத்தனத்தின் உச்சம் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாடு மொத்தம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது என்றார்.