ஹமாஸ் தாக்குதலுக்கு குடும்பத்தினரை பறிகொடுத்து மாயமான பிரித்தானிய பெண்: வெளிவரும் துயர சம்பவம்
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் தாயார் மற்றும் சகோதரியை இழந்த இளம்பெண் ஒருவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் படுகொலை
குறித்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் வெளியிட்ட தகவலில், சம்பவத்தன்று தாயார் மற்றும் சகோதரியுடன் அவரும் ஹமாஸ் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
Credit: UNPIXS
16 வயதான Noiya Sharabi மற்றும் அவரது 13 வயது சகோதரி Yahel ஆகியோர் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதலின் போது மாயமாகினர்.
ஆனால் இவர்களது 48 வயது தாயார் Lianne சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் சிறுமி Yahel கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியிருந்தும், Noiya மாயமாகியுள்ளார் என்றே தெரிவித்து வந்தனர்.
Credit: UNPIXS
தற்போது Noiya-வின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் இவர்களின் தந்தை 51 வயதான ஏலி தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.
அக்டோபர் 7ல் ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட 10வது பிரித்தானியர் Noiya என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |