பிரான்சில் அரியவகை வைரஸ் தொற்றால் உயிருக்குப் போராடும் பிரித்தானியர்

United Kingdom France
By Balamanuvelan Sep 24, 2026 07:44 AM GMT
Report

British man critically ill with West Nile virus in France: பிரான்சில் அரியவகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிவருகிறார் பிரித்தானியர் ஒருவர்.

பிரான்சில், தோட்டத்தில் வேலை செய்யும்போது கொசு கடித்ததால், அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் பிரித்தானியர் ஒருவர்.

அரியவகை வைரஸ் தொற்றால் உயிருக்குப் போராடும் பிரித்தானியர்

ஓய்வு பெற்று பிரான்சில் வாழ்ந்துவரும் 75 வயது பிரித்தானியர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்படவே, அவரது மகளான கேற்றி, பிரித்தானியாவிலிருந்து தந்தையைக் காண்பதற்காக பிரான்ஸ் விரைந்துள்ளார். 

பிரான்சில் அரியவகை வைரஸ் தொற்றால் உயிருக்குப் போராடும் பிரித்தானியர் | Brit Man Critically Ill West Nile Virus In France

கேற்றி தன் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நாளுக்கு நாள் அவரது நிலைமை மோசமாகிக்கொண்டே சென்றிருக்கிறதேயொழிய, அவரது நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம்.

விடயம் என்னவென்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டரை வாரங்களுக்குப் பிறகுதான் அவருக்கு என்ன பிரச்சினை என்பதையே கண்டுபிடித்துள்ளார்கள் மருத்துவர்கள்.

அதுவும், அவருக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் இரத்தத்தில் தொற்று ஏற்பட்ட பிறகுதான் அவருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) என்னும் வைரஸ் தொற்று உருவாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

ஹோர்முஸ் ஜலசந்தியை வைத்து பிளாக் மெயில் செய்யக்கூடாது: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

ஹோர்முஸ் ஜலசந்தியை வைத்து பிளாக் மெயில் செய்யக்கூடாது: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

அவர் தொற்று பாதிப்புக்குள்ளாகி பாதி கோமா நிலையிலிருக்கும் நிலையில், தன் தந்தை மீண்டும் எழுந்து நடமாடுவாரா, பேசுவாரா என தினமும் தாங்கள் பயந்துகொண்டே இருப்பதாகத் தெரிவிக்கிறார் கேற்றி.

வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று

விடயம் என்னவென்றால், இந்த ஆண்டில் மட்டும், இதுவரை, பிரான்சின் 19 பகுதிகளில் 92 பேர் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

பிரான்சில் அரியவகை வைரஸ் தொற்றால் உயிருக்குப் போராடும் பிரித்தானியர் | Brit Man Critically Ill West Nile Virus In France

இந்த வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று, Culex pipiens என்னும் கொசு கடிப்பதால் பரவுகிறது. பிரச்சினை என்னவென்றால், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 80 சதவிகிதம் பேருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் தோன்றுவதில்லை. 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே, ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளான திடீர் காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, சில நேரங்களில் தோலில் சிவப்புப் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும்.

ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டும், சீரியஸான நரம்பு மண்டல பிரச்சினைகளான மூளைக்காய்ச்சல் முதலான அறிகுறிகள் தோன்றுகின்றன, அவற்றை, இரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

ஆக, பிரான்சில் வாழ்பவர்கள், இப்படி ஒரு பிரச்சினை நிலவுகிறது என்பதை நினைவில் கொள்ள வலியுறுத்துகிறார் கேற்றி. வெஸ்ட் நைல் வைரஸ் பிரான்சில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது என மக்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்கிறார் அவர்.

ஆக, இந்த வெஸ்ட் நைல் தொற்றிலிருந்து தப்ப, கொசுக்கள் பெருகுவதை தடுக்க, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது முதலான விடயங்கள் மூலம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது நல்லது. 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US