சுறாக்களுக்கு நடுவே.,காதலியிடம் திருமண பிரேரணை வெளிப்படுத்திய பிரித்தானிய இளைஞர்
Brit express marriage propose to girlfriend with sharks: பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் சுறாக்களுக்கு நடுவே தனது காதலிக்கு திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்கெக்னெஸ் என்ற மீன் காட்சியகத்தில் நீருக்கடியில் தனது காதலிக்கு திருமணம் செய்ய முன்மொழிந்தார்.
மீன் காட்சியகத்தில் சுறாக்கள்
பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் உள்ள ஸ்கெக்னெஸ் மீன் காட்சியகத்தில் சுறாக்கள் உள்ளன.
இந்த காட்சியகத்தில் பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் என்ற இளைஞர், தனது காதலி பெய்க்கை அழைத்துக் கொண்டு நீருக்கடியில் சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் வெட்சூட் அணிந்து ஸ்கூபா கியரை மாட்டிக்கொண்டு சுறாக்களுடன் அங்கிருந்தனர்.
திருமணம் முன்மொழிவு
சுறாக்கள் அவர்களை சுற்றி நீந்திக்கொண்டிருக்க ஜேம்ஸ் வால்ஷ் காதலி பெய்க்கிற்கு திருமணம் செய்ய முன்மொழிந்தார்.
இந்த நிகழ்விற்காக அந்த காட்சியக ஊழியர்கள் வால்ஷிற்கு உதவ, ஒரு சிறப்பு அடையாளப் பலகையை வழங்கினர்.
அத்துடன் சுறாக்களுடன் டைவிங் செய்யும் மற்ற குழுவினரிடமிருந்து அந்த ஜோடியை பிரித்தும் வைத்தனர்.
ஜேம்ஸ் வால்ஷ் கூறுகையில், "சுறாக்கள் அவளுக்கு மிகவும் பிடித்த விலங்கு. அதை நான் அங்குதான் செய்ய விரும்பினேன் என்பது எனக்குத் தெரியும். அவளுக்குப் பிடித்த விலங்கால் சூழப்பட்டிருக்கும்போது, அது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும் என்று நான் நினைத்தேன்" என்றார்.
