பிரான்சில் கொடூர முடிவை சந்தித்த பிரித்தானிய பெண் இவர்தான்: புகைப்படங்கள் வெளியாகின
பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன..
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்துள்ள பயங்கர முடிவு
செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவரது காதலரும், அவசர உதவிக் குழுவினரும் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படம் முதலான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கோர மரணத்தை எதிர்கொண்ட அந்தப் பெண்ணின் பெயர் Karen Carter (65). அவர் பிரெஞ்சு கிராமமான Trémolat என்னுமிடத்தில் சுமார் பத்து ஆண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளார்.
திருமணமான அவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள்.
Karen எதற்காக இப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியாத நிலையில், அவரைக் கொலை செய்த நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |