பாரிஸ் நகரில் பிரித்தானிய இளம் பெண் ஒருவருக்கு கத்திமுனையில் நடந்த கொடூரம்
பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் அடிவாரத்தில் பிரித்தானிய பெண் பொலிஸ் ஒருவர் கத்திமுனையில் சீரழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பெண் பொலிஸ்
பாரிஸ் நகரின் Champ-de-Mars பகுதியில் நள்ளிரவு கடந்த நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக அந்த 23 வயது பிரித்தானிய பெண் பொலிஸ் உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் தம்மை நெருங்கிய நிலையில், தப்பிக்க முயன்றதாகவும் ஆனல் அவர் கத்தியை கட்டி மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
@getty
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குற்றத்தடுப்புப் படையினர் மற்றும் சிறப்பு அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றினர்.
மேலும், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், 35 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சதேக நபரை கைது
சம்பவத்தின் போது தனிப்பட்ட தேவைகளுக்காக புதர் மறைவில் ஒதுங்கிய அவர் மீது அந்த நபர் தாக்குதல் தொடுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
தொடர்புடைய பிரித்தானியர் தமது நண்பருடன் அப்போது இரவைக் கழித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 7வது காவல் நிலையத்தை சேர்ந்த பொலிசார், சதேக நபரை கைது செய்துள்ளனர்.
இந்த வாரம் நடந்த பாடசாலை கத்திக்குத்து தாக்குதலுக்கு பின்னர் பாரிஸ் நகரம் உயர் எச்சரிக்கை நடவடிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பொலிஸ் கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |