நூறாண்டுகளுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்ட 9 பிரித்தானிய இராணுவ வீரர்கள்: வெளிவரும் பின்னணி
முதல் உலகப் போரில் உயிர் நீத்த பிரித்தானிய இராணுவ வீரர்களில் 9 பேர்களுக்கு உரிய மரியாதைகளுடன் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள Tyne Cot இராணுவ கல்லறையில் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது நல்லடக்கம் செய்யப்பட்ட இந்த 9 இராணுவ வீரர்களில் 7 பேர்களின் அடையாளம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
Ypres நகருக்கு அருகில் போரில் மடிந்த 12,000 காமன்வெல்த் வீரர்களுடன் இந்த 9 பிரித்தானிய இராணுவ வீரர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட 7 பேர்களும் 11வது பட்டாலியனில் இணைந்து பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, அக்டோபர் 1917ல் பாஸ்செண்டேல் (Passchendaele) போரில் அவர்கள் ஒருவருக்கொருவர் சில நாட்களில் இறந்ததாக தெரியவந்துள்ளது.
இளவரசர் எட்வர்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
2018ல் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், டி.என்.ஏ சோதனையின் மூலமே உறுதி செய்துள்ளனர்.
மேலும், இராணுவத்தினர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய பொருட்களின் அடிப்படையிலும் குடும்பத்தினரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வந்துள்ளது.