திருமணம் நிச்சயமானதைக் கொண்டாட பார்ட்டி வைத்த பிரித்தானியர்: எதிர்பாராவிதமாக நிகழ்ந்த துயரம்
தனக்கு திருமணம் நிச்சயமானதைக் கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார் அவுஸ்திரேலியாவில் வாழும் பிரித்தானியர் ஒருவர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தனது திருமண நிச்சய நாள் பார்ட்டி நடக்கும் முன்பே, அசாதாரண விபத்தொன்றில் அவர் பலியாகிவிட்டார்.
திருமணம் நிச்சயமானதைக் கொண்டாட பார்ட்டி வைத்த பிரித்தானியர்
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பிரித்தானியரான Liam Trimmer (29), செவிலியரான தனது காதலியுடன் தனக்கு திருமணம் நிச்சயமானதைக் கொண்டாடுவதற்காக, ஞாயிறன்று தனது வீட்டில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
பார்ட்டி துவங்கும் முன் எதற்காகவோ மேலே ஏறிய Liam, தவறி கீழே விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்ததில் அவரது கழுத்திலுள்ள carotid artery என்னும், தலைக்கும் மூளைக்கும் இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
பார்ட்டிக்காக வந்திருந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆம்புலன்சை அழைத்துவிட்டு, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே, ஏராளமான இரத்தம் வெளியேறி Liam உயிரிழந்துவிட்டார்.
2013ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த Liam, பொலிசாராக பணியாற்றிவந்தார். சிறப்பாக பணியாற்றும் பொலிசார் என அவரது மூத்த அதிகாரிகளும், சக பொலிசாரும் Liamக்கு புகழாரம் சூடுகிறார்கள்.
தனது திருமண நிச்சய நாளன்றே Liam உயிரிழந்த விடயம், கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |