இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்
ஒரு பிரித்தானிய தம்பதியின் இந்திய சுற்றுலா, ஒரு சாரதியின் தவறால் சோகத்தில் முடிந்துள்ளது.
பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானிய குடிமக்களான ஹரிஷ் சோலாங்கி (86) மற்றும் அவரது மனைவியான சந்திரகாந்தா (81) இருவரும் இந்தியாவிலுள்ள கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கடந்த மாத இறுதியில், தம்பதியர் Candolim என்னுமிடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் தவறான பக்கத்தில் தாறுமாறாக பயணித்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஹரிஷ் அன்று மாலையே உயிரிழந்துள்ளார்.
சந்திரகாந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அவரது நிலைமையும் மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய விக்கி ஓம் பிரகாஷ் ஜெயின் (48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |