புதிய போராட்டங்களுக்குத் தயாராகும் பிரான்ஸ்: கலவரத்தில் சிக்கிய பிரித்தானியப் பெண்மணி
France braces for fresh round of protests: பிரான்ஸ் புதிய சுற்றுப் போராட்டங்களுக்குத் தயாராகிறது.
பிரான்சில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களின் போது, பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சிக்கிக்கொண்டதில் , அவரது கால் பகுதியில் (கெண்டைக்கால்) ஒரு பகுதி துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலவரங்களுக்கு நடுவே
வார இறுதியில் முக்கிய நகரங்களில் தீவிரமான போராட்டங்கள் வெடித்தன; காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்துள்ளனர், மேலும் எண்ணற்ற கடைகள் சேதப்படுத்தப்பட்டன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆயுதமேந்திய பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் வன்முறை மோதல்களைத் தூண்டக்கூடிய ஒரு புதிய சுற்று அமைதியின்மைக்கு பிரான்ஸ் தற்போது தயாராகி வருகிறது என்றே கூறுகின்றனர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, துலூஸில் சனிக்கிழமையன்று பிரித்தானியப் பெண்மணி ஒருவர் கலவரங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டதில், ஏதோ ஒரு பொருளால் தாக்கப்பட்டதில், அவரது கால் பகுதியில் (கெண்டைக்கால்) ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய கையெறி குண்டுகளையும் பயன்படுத்திய நிலையில், குறித்த பிரித்தானியர் அதில் சிக்கியிருக்கலாம் என உள்ளூர் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழப்பத்தின் போது, அப்பாவிப் பொதுமக்களும் கலவரத் தடுப்புப் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டனர் என்று பொதுமக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெருமுனை மருத்துவப் பணியாளர்கள், காயமடைந்த பிரித்தானியருக்கு முதலுதவி அளித்துள்ளனர். மேலும், அந்த பிரித்தானியப் பெண் தனது துணைவருடன் இருந்ததாகவும், அந்தத் தம்பதி சம்பவம் நடந்த அதே நாளில் துலூஸுக்கு வந்தடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின் அவசர சேவைப் பிரிவினர் அங்கு வந்து, அந்தச் சுற்றுலாப் பயணியை அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஊரடங்கு உத்தரவு
கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின்போது சரியாக எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தொடர்பிலானத் தகவலேதும் வெளியாகவில்லை.
ஆனால், குறைந்தது 3,000 வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன என்றும், 2,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, திங்கட்கிழமை இரவு, முக்கிய நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவுகளை அமுல்படுத்தியதன் மூலம் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
வார இறுதியில் நிகழ்ந்த பேரழிவு தரும் கலவரங்களின் போது, முக்கிய நகரங்களின் மீதான கட்டுப்பாட்டைத் தாங்கள் இழந்துவிட்டதாக பிரெஞ்சு காவல்துறை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.