பிரித்தானிய பெண் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்த மோசமான புகைப்படங்களா? வெளியாகியுள்ள திடுக் தகவல்கள்
பிரித்தானிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
லண்டனிலிருந்து தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் சென்ற Mayra Zulfiquar (24) என்ற இளம்பெண், கடந்த திங்கட்கிழமை (மே 3) அன்று, தான் தங்கியிருந்த வீட்டில் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கொலையில், Zahir Jadoon மற்றும் Saad Butt (28) என்னும் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக தாக்குவதாகவும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுவதாக பொலிசில் புகார் செய்திருந்தார் Mayra.
ஆனால், இப்போது வேறு விதமான சில செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, Zahirஐ காதலித்திருக்கிறார் Mayra, ஆனால், காதலர்கள் பிரிந்தபின் Zahirஐ Mayra ஆள் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. அடிபட்டு உடலில் காயங்களுடன் நிர்வாணமாக கிடக்கும் Zahirஇன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஆகவே, தன்னை ஆள் வைத்து அடித்த Mayraவை பழிவாங்கவே Zahir அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அதற்கு ஆதாரமாக, Zahirம் Mayraவும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Zahir இன்னமும் தலைமறைவாகவே உள்ள நிலையில், வழக்கில் எதிர்பாராத தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.