லண்டன் இராணுவ கல்லூரியில் இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த பிரித்தானியா
காஸாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலியர்கள் லண்டன் பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர பிரித்தானியா தடை விதித்துள்ளது.
கடும் எதிர்ப்பு
ஆனால் இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும், சமீபத்தில் காஸா போர் தொடர்பாக அதன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முயன்று வருகிறது.
இஸ்ரேல் காஸா பகுதியில் தாக்குதல்களை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதாகவும் மிரட்டல் விடுத்தது. பிரித்தானியாவின் இந்த நகர்வு அடுத்த ஆண்டு இஸ்ரேலிய மாணவர்கள் ராயல் பாதுகாப்புக் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்படுவார்கள்.
முடிவு தவறானது
காஸா சிட்டியை மொத்தமாக கைப்பற்ற இருப்பதாக ஆகஸ்டு மாதம் இஸ்ரேல் அறிவித்த நிலையிலேயே, பிரித்தானியா இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே, காஸாவில் தனது இராணுவ நடவடிக்கையை மேலும் அதிகரிக்க இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதன் காரணமாக இஸ்ரேலிய மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்றார். செப்டம்பர் மாத தொடக்கத்தில், காஸா விரிவாக்கம் தொடர்பாக பிரித்தானியா அதன் மிகப்பெரிய ஆயுத கண்காட்சியில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகளைத் தடை செய்தது, ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்களை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |