பிரித்தானியாவில் யார் யார் பெருந்தொகை வரியாக செலுத்தியவர்கள்... முழுமையானப் பட்டியல்
பிரித்தானியாவின் மிகப்பெரிய வரி செலுத்துவோர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சூதாட்ட நிறுவன உரிமையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் வந்துள்ளனர்.
400 மில்லியன் பவுண்டுகள்
சண்டே டைம்ஸ் வரி செலுத்துவோர் பட்டியல் 2026ல், கடந்த ஆண்டில் பிரித்தானியாவின் அதிக வரி செலுத்துவோரில் முதல் 100 பேர்கள் மொத்தம் 5,758 பில்லியன் பவுண்டுகளை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முதல் முறையாக, சூதாட்ட நிறுவன உரிமையாளர்களான பிரெட் டோன் மற்றும் பீற்றர் டோன் ஆகியோர் 12 மாதங்களில் 400.1 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்திய நிலையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 273.4 மில்லியன் பவுண்டுகள் அதிகமாக வரி செலுத்தியுள்ளனர். செஷயரின் வாரிங்டனில் 1967ல் Betfred என்ற சூதாட்ட நிறுவனத்தை சகோதரர்களான பிரெட் டோன் மற்றும் பீற்றர் டோன் ஆகியோர் நிறுவினர்.
மிகப்பெரிய நிதித்துறை செல்வந்தர்களை விடவும், இவர்கள் இருவருமே அதிக வரி செலுத்தியுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர் முன்னாள் ஒன் டைரக்ஷன் நட்சத்திரமான ஹரி ஸ்டைல்ஸ்.
அவர் 24.7 மில்லியன் பவுண்டுகள் வரியாக செலுத்தி 54வது இடத்தில் உள்ளார். இரண்டு பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களும் முதல் முறையாக பட்டியலில் இணைந்துள்ளனர்.
வாரத்திற்கு சுமார் 500,000 பவுண்டுகள் மற்றும் ஊக்கத்தொகையை சம்பாதிக்கும் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்ட், தோராயமாக 16.9 மில்லியன் பவுண்டுகள் வரியாக செலுத்தியுள்ளார்.

லிவர்பூல் ஃபார்வர்ட் முகமது சலா தனது சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் வணிக ஒப்பந்தங்களுடன் 14.5 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளார்.
14 பேர்கள் 100 மில்லியன்
பட்டியலில் 36வது இடத்தில் இருக்கும் எழுத்தாளர் JK Rowling கடந்த வருடம் 47.5 மில்லியன் பவுண்டுகள் வரியாக செலுத்தியுள்ளார். பிரபல பாடகர் Ed Sheeran மற்றும் குத்துச்சண்டை வீரர் அந்தோணி ஜோசுவா ஆகியோர் 11 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தி முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
100 பேர்கள் கொண்ட இந்தப் பட்டியலில், குறைந்தது 11 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியதால் பலர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். குறித்த பட்டியலில், 14 பேர்கள் 100 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, வரிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒன்பது பேர்களில் ஒருவர் தற்போது இங்கிலாந்தில் வசிப்பவராக இல்லை என்றும் மொனாக்கோ, துபாய், சுவிட்சர்லாந்து, சைப்ரஸ், போர்ச்சுகல், அமெரிக்கா அல்லது சேனல் தீவுகளில் குடியேறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |