ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது பிரித்தானியா: ஆனால்... வெளியாகியுள்ள வேடிக்கையான உண்மை
புகலிடக்கோரிக்கையாளர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்ப பிரித்தானியா முயன்று வருவது அனைவரும் அறிந்த விடயம்தான்.
ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்று கூறும் பிரித்தானிய அரசு
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் ஆரம்ப நிலவரப்படி 130,000 ஆக உள்ளது.
அவர்களை எப்படியாவது ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த பிரித்தானிய அரசு முயன்றுவருகிறது. ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது சட்டவிரோதம், அது பாதுகாப்பான மூன்றாவது நாடு அல்ல என தீர்ப்பளித்துவிட்டார்கள்.
Image: PA
வேடிக்கையான உண்மை
பிரித்தானிய அரசு ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது. ஆனால், ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானிய புகலிடம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசு கூறுவதுபோல் ருவாண்டா பாதுகாப்பான நாடாக இருக்குமானால், அந்த நாட்டவர்கள் ஏன் பிரித்தானியாவில் புகலிடம் கோரவேண்டும்?
2020ஆம் ஆண்டிலிருந்து, பிரித்தானியா சுமார் 40 ருவாண்டா நாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ள உண்மை, அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Al Jazeera
2011க்கும் 2021க்கும் இடையில், தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி புகலிடம் கோரிய 37 ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானியா புகலிடம் வழங்கியுள்ளது.
ருவாண்டா பாதுகாப்பான நாடு என நமக்கு பிரித்தானிய அரசு கூறுகிறது, ஆனால், பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்பதை அங்கீகரித்துள்ளது. அப்படியானால், ருவாண்டா நாட்டவர்களுக்கே ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்றால், மற்ற நாட்டவர்களுக்கு மட்டும் அது எப்படி பாதுகாப்பான நாடாக இருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை என்கிறார், புலம்பெயர்தல் நிபுணரும், Durham பல்கலைப் பேராசிரியருமான Thom Brooks என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |