இஸ்ரேல் மீதான தாக்குதலை பிரித்தானியாவில் கொண்டாடும் சிலர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ
இஸ்ரேல் மீதான தாக்குதலை, லண்டனில் சிலர் கொண்டாடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
இஸ்ரேல் மீது தாக்குதல்
சனிக்கிழமையன்று, இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் திருப்பித் தாக்க, இரு தரப்பிலுமாக பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இஸ்ரேலியர்களில் நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை பிரித்தானியாவில் கொண்டாடும் சிலர்
இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலை, லண்டனில் சிலர் கொண்டாடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன. அந்த வீடியோக்களில் ஒன்றை புலம்பெயர்தல் அமைச்சரான Robert Jenrickம் பகிர்ந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, Robert Jenrick, இந்த விடயத்தில் தலையிடுமாறு லண்டன் பொலிசாரை வலியுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில், லண்டனில் பொலிசார் ரோந்து செல்வதை அதிகரித்துள்ளார்கள்.
Acton, half an hour ago.
— Rachel Riley MBE ? (@RachelRileyRR) October 7, 2023
Popped into a cafe for some baklava with the kids and our Ukrainian friends.
People have been brutally murdered, kidnapped and there are people in London dancing.
Just had a reassuring call with the police, if anyone is scared, please call them. https://t.co/fYjXn4zEDF pic.twitter.com/dQjcAsRyDS
தொலைக்காட்சித் தொகுப்பாளினியான Rachel Riley என்பவர், தான் காரில் பயணிக்கும்போது, லண்டனில் சிலர் பாலஸ்தீனிய கொடிகளுடன், கார்களில் தாளம்போட்டபடி பார்ட்டி நடத்துவதைக் கண்டு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலில் மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள். அதை லண்டனில் சிலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் அவர். அந்த வீடியோவைத்தான் புலம்பெயர்தல் அமைச்சர் பகிர்ந்துள்ளார், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கையும் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |