பிரித்தானியாவில் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளங் குழந்தை! தாய் எடுத்த முடிவு
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று பிறக்கும் போதே வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Greater Manchester-ல் உள்ள Bury-ஐ சேர்ந்தவர் Ashlie Fowler(29). இவர் சமீபத்தில் கருவுற்றுள்ளார்.
இந்நிலையில் அவருடைய கர்ப்ப காலத்தில் இறுதி கட்டத்தில் குழந்தைக்கு ஒரு அரிய வகை நோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது அந்த குழந்தைக்கு gastroschisis என்ற நோய் இருந்துள்ளது. இதனால் குழந்தையின் அடிவயிறு பகுதி சரியாக வளராத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து Ashlieக்கு மருத்துவர்கள் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
குழந்தை வெளியே வந்த பிறகு அடி வயிறுக்கு கீழ் உள்ள உறுப்புகள் மற்றும் பாகங்கள் அனைத்தும் வெளியே தெரியும்படி இருந்துள்ளது. இதையடுத்து குழந்தைக்கு மூன்று வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து Ashlie Fowler கூறியதாவது, எங்களுடைய குழந்தை ஒரு மிகவும் வித்தியாசமான குழந்தை. இந்த பாதிப்பால் அடி வயிறுக்கு கீழ் இருக்கும் உறுப்புகள் மற்றும் பாகங்கள் அனைத்தும் மறைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும் எங்களுடைய குழந்தை தற்போது நன்றாக உள்ளது. நாங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தனது குழந்தைக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பது தெரிந்தும் Ashlie குழந்தையை மனப்பூர்மாக ஏற்று கொண்டது குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.