பிரித்தானியாவில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டது! வெளியான அறிவிப்பு: மகிழ்ச்சியில் மக்கள்
NHS-ல் பயணித்திற்காக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
கொரோனாவால் தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை, கொரோனா பரிசோதனை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக நீண்ட நட்களாக புகார் அளித்து வருகிறது.
இந்நிலையில், இனி பச்சை பட்டியலில் உள்ள நாடுகள் அல்லது அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கான கொரோனா சோதனை கட்டணம் 88 பவுண்டிலிருந்து 68 பவுண்டாக குறைக்கப்படும் என சுகாதாரம் மற்றும் பொது பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.
அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கு, இரண்டு பரிசோதனைக்கான கட்டணம் 170 பவுண்டிலிருந்து 136 பவுண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்ல ஆர்வமாக உள்ள பலருக்கு பிசிஆர் சோதனை கட்டணம் ஒரு தடையாக உள்ளது.
அதன் காரணமாக நியாயமான கட்டணத்தில் தரமான சோதனை மேற்கொள்ளவதை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் Sajid Javid கூறினார்.
கட்டணம் அதிகமாக வசூலிக்கும் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என Sajid Javid எச்சரித்துள்ளார்.