பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பிரித்தானியா... பின்னணி
பிரான்ஸ் நாட்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடனான ஒப்பந்தத்தை பிரித்தானியா திடீரென முறித்துக்கொண்டது.
Valneva என்னும் பிரெஞ்சு நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். அந்த நிறுவனத்திடமிருந்து சுமார் 100 மில்லியன் டோஸ் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு பிரித்தானியா ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால், ஒப்பந்த விதிகளை மீறியதாக, தற்போது அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிரித்தானியா முறித்துக்கொண்டுள்ளது.
என்ன விதியை மீறியது, எதனால் ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து Valneva நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ஒரு சமயத்தில் Valneva நிறுவனம் தங்களுக்கு தடுப்பூசி வழங்காமல் பிரித்தானியாவுக்கு தடுப்பூசி வழங்க முன்வந்ததால் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கோபத்தை சந்திக்கும் நிலைக்கு Valneva நிறுவனம் சென்றது குறிப்பிடத்தக்கது.