பிரித்தானியாவுடனான 68 ஆண்டுகால ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்ய ஜனாதிபதி: விரிவான பின்னணி
பிரித்தானிய மீனவர்கள் Barents கடலில் இனி மீன் பிடிக்க முடியாதபடி, 68 ஆண்டு கால ஒப்பந்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்படும் நிலை
இதனால் பிரித்தானியாவில் பரவலாக செயல்படும் fish and chip கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ரஷ்யா மீது பொருளாதார நெருக்கடியை பிரித்தானியா அளித்து வருவதுடன், உக்ரைனுக்கு ஏவுகணைகளையும் பிரித்தானியா வழங்கி வருகிறது.
Credit: east2west news
இதுவே சுமார் 70 ஆண்டுகால ஒப்பந்தத்தை ரஷ்யா ரத்து செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. பிரித்தானிய மீனவர்கள் Barents கடலில் மீன் பிடிக்கும் ஒப்பந்தமானது சோவியத் ஒன்றியத்துடன் 68 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 71 வயதான விளாடிமிர் புடின் அந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ததுடன், இனி Barents கடலில் மீன் பிடிக்கும் பொருட்டு பிரித்தானிய மீனவர்கள் முயன்றால், ரஷ்ய கடற்படை பதிலளிக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
Credit: Alamy
விளாடிமிர் புடினின் இந்த முடிவானது ரஷ்யாவில் கொண்டாடப்பட்டு வருவதுடன், பிரித்தானியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
நமது வளத்தையே பயன்படுத்தியுள்ளனர்
மேலும், தங்கள் மீன் வளத்தை இனி தங்கள் மக்களே பயன்படுத்தும் வகையில் புடின் துணிவான நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்ய நாடாளுமன்ற அவைத்தலைவர் Vyacheslav Volodin பாராட்டியுள்ளார்.
நேர்மையற்ற பிரித்தானியர்களுக்கு நீண்ட 68 ஆண்டுகள் ரஷ்ய மீன் வளம் உணவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம் மீது தடைகளை விதித்துவிட்டு, அவர்களின் அன்றாட உணவில் 40 சதவிகிதம் நமது வளத்தையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
1956ல் சோவியத் ஒன்றியத்துடன் Barents கடலில் மீன் பிடிக்கும் இந்த ஒப்பந்தமானது முன்னெடுக்கப்பட்டது. 1961ல் பிரித்தானிய கப்பல்கள் சுமார் 158,000 டன் மீன்களை Barents கடலில் இருந்து பிடித்துள்ளது.
1970ல் இந்த எண்ணிக்கையானது 181,000 டன் என அதிகரித்தது. ஆனால் அதன் பின்னர் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட மீன்பிடி ஒதுக்கீடு அனுமதிக்கப்படும் அளவைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |