பிரித்தானியா பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது... ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஆபத்தில் உள்ளது! MHRA தலைவர் எச்சரிக்கை
கொரோனாவின் 3வது அலையிலிருந்து பிரித்தானியா பாதுகாக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால், தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியதால் ஐரோப்பிய ஒன்றியம் ஆபத்தில் உள்ளது என MHRA-ன் முன்னாள் தலைமை நிர்வாகி சர் கென்ட் உட்ஸ் எச்சரித்துள்ளார்.
இரத்த உறைவு பற்றிய ஆதாரமற்ற கவலைகளால் ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்குவதை தாமதப்படுத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இது 3வது அலைக்கு வழிவகுத்திருக்கலாம். 3வது அலை விரைவில் ஏற்படும் என்றாலும்கூட இரண்டு காரணங்களுக்காக அதை தடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முதலாவதாக, இந்த நாடுகள் அதற்கான நேரத்தை இழந்துவிட்டன. இரண்டவாது காரணம் பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை.
அதாவது, மக்கள் இப்போது தங்கள் தடுப்பூசியை விரைவில் பெற தயாராக இருப்பார்களா? என சர் கென்ட் உட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானியா தடுப்பூசி விநியோகம் குறித்து சர் கென்ட் உட்ஸ் கூறியதாவது, நாட்டில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நான் நம்புகிறேன், பிரித்தானியாவால் கொரோனா 3வது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என கூறினார்.