பிரித்தானியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! 35 வயதில் கோடீஸ்வரராக மாறிய கதை... ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரிட்டனில் இளைஞர் ஒருவர் தனது 35 வயதிலேயே கோடீஸ்வரராக மாறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் தனது 35 வயதில் ஒய்வு பெற்ற பணக்காரர் ஒருவர், மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அவர் இளம் வயதிலயே கோடி கணக்கில் சம்பாதித்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றி கொண்டிருந்தார். அதன் பிறகு அவரது மூளைக்கு ஒரு அருமையான யோசனை தென்பட்டுள்ளது. அதன்படி 2014ஆம் ஆண்டில் கிரிப்டோகரென்சி மீது தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய தொடங்கினார்.
முதலீடு செய்த முதல் முறையே கோடிக்கணக்கில் பணத்தை அள்ளினார். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட பேராசையால் சம்பாதித்த அனைத்து பணத்தையும் தைரியமாக கிரிப்டோகரென்சி மீது முதலீடு செய்தார்.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு சுமார் 2 மில்லியன் பவுண்டுகளை வென்றார். நாளடைவில் அதன் மூலம் 26 மில்லியன் பவுண்ட் லாபமாக கிடைத்துள்ளது.
இந்நிலையில் வாழ்க்கை தேவைக்கு அதிகமாகவே பணம் ஈட்டிவிட்டதால் 2019ஆம் ஆண்டு அதாவது அவரது 35வது வயதில் ஓய்வு வாழ்க்கையை வாழ துவங்கிவிட்டார்.
ஆனால் 2 ஆண்டுகளில் அவருக்கு பணக்காரராக இருந்து போர் அடித்துவிட்டதால் அவர் மீண்டும் வேலை செய்ய திட்மிட்டு வருகிற செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.