3 வயது சிறுமியை கொலை செய்த பிரித்தானியருக்கு கிடைத்த தண்டனை! 2 வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி
பிரித்தானியாவில் சாப்பிட மறுத்த 3 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு 11 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Folkestone என்ற பகுதியில் வசித்து வருபவர் Paul Marsh(27). இவருக்கு பெண் தோழி ஒருவர் இருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு 3 வயதில் Jessica Dalgleish என்ற ஊனமுற்ற குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில் Paul Marsh 3 வயது குழந்தைக்கு சாண்ட்விச் உணவை ஊட்டிவிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தை சாப்பிட மறுத்துள்ளது. இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற Paul குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார்.
ஆனால் குழந்தையை அவரே தாக்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்ததாக கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முந்தைய நாள் Jessica எனும் குழந்தை பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் பொலிஸ் முதற்கட்டமாக Paulயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் தான் கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.
An 11-year jail term has been imposed on a man who inflicted fatal injuries on a three-year-old child at a house in Sandgate, near #Folkestone, in December 2019.
— Kent Police (UK) (@kent_police) December 20, 2021
Details of the case are here... https://t.co/A05r5ZIHEL pic.twitter.com/Wmu8EixQQg
இதில் Paul மேல் உள்ள குற்றம் 2 வருடங்களுக்கு பிறகு நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.