பிரித்தானியா இன்னும் கடுமையான காலங்களை சந்திக்க தயாராக வேண்டும்- சுகாதார நிபுணர் எச்சரிக்கை!
காய்ச்சல் போன்ற சுவாச நோய்களுக்கு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், பிரித்தனியா அடுத்து வரவுள்ள ஒரு கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என ஒரு உயர் மருத்துவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் தடுப்பூசி திட்டம் வேகமாக செயல்படுத்தப்படும் நிலையில், கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதால், இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக தேசிய ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த Public Health England-ன் கோவிட் -19 strategic response director மருத்துவர் Susan Hopkins, பிரித்தானிய மக்களுக்கும் NHS -க்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோடை முடிந்து அடுத்து வரும் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் கொரோனா வைரஸ் மட்டுமின்றி வேறு சில சுவாச நோய்களாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என அவர் கூறினார்.
மக்கள் கொரோனா வைரஸுடன் சேர்த்து வேறு சில காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களின் இறப்பு விகிதம் இருமடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது இருப்பதை விட நிலைமை இன்னும் மோசமையலாம் என்று எச்சரித்துள்ளார். அதனால் NHS முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவேண்டும் என Susan Hopkins கூறினார்.