துக்கமனுஷ்டிக்கும் பிரித்தானியா... பொதுமக்கள் என்னென்ன செய்யலாம்? செய்யக் கூடாது?
இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பொதுமக்கள் திரளானோர் லண்டனுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர்.
இறுதிச்சடங்குகளுக்கு பின்னரும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க உள்ளனர்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து பிரித்தானியாவில் 12 நாட்கள் துக்கமனுசரிக்கப்படுகிறது. எதிர்வரும் சில வாரங்கள் பிரித்தானியாவில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும், அரசாங்கம் படிப்படியாக அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பொதுமக்கள் திரளானோர் லண்டனுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். தேசமே துக்கத்தில் இருப்பதால், ராணியாரின் இறுதிச்சடங்குகள் முடிவடையும் வரையில் என்னென்ன மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
ராணியார் மறைவை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் 12 நாட்கள் துக்கமனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. ராணியாரின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்படும். இறுதிச்சடங்குகளுக்கு பின்னரும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க உள்ளனர்.
பிரித்தானியாவில் பாடசாலைகள் திறந்து செயல்படும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்லவே வலியுறுத்துகின்றனர். துக்கமனுசரிக்கப்படும் இந்த 12 நாட்களும் பிரித்தானியாவில் எந்த விளையாட்டுப் போட்டிகளும் முன்னெடுக்கப்படாது.
ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளில் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள் வணிக வளாகங்கள் செயல்படுமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் இல்லை.
ஆனால் இறுதிச்சடங்கு நாளில் லண்டன் பங்கு சந்தை செயல்படாது என அறிவித்துள்ளனர். அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துக்கமனுசரிக்கப்படும் நாளில் உரிய உடைகளை உடுத்த கோரியுள்ளனர்.
@getty
தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 15 முதல் 17ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்திருந்த ரயில் வேலை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பக்கிங்ஹாம் அரண்மனை வட்டார மக்கள் கிரீன் பார்க் அல்லது ஹைட் பார்க் பகுதியில் ராணியாருக்கு மலர் அஞ்சலி செலுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ட்சர் கோட்டை பகுதி மக்களுக்கு கேம்பிரிட்ஜ் கேட் பகுதியில் மலர் அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சாண்ட்ரிங்ஹாம் தோட்டம் பகுதி பொது மக்கள் நார்விச் கேட்டில் மலர் அஞ்சலி செலுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் பால்மோரல் கோட்டை பகுதியில் திரளும் மக்கள் தங்கள் மலர் அஞ்சலிகளை பிரதான வாயிலில் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.