பிரித்தானியாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் வேண்டும்: பிரித்தானிய பிரபலம் தெரிவித்துள்ள கருத்து
பிரித்தானியாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் வேண்டும் என தொழில்துறையினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எங்கு புலம்பெயர்தல் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கிறதோ, அங்கு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துங்கள், அதே நேரத்தில் சமுதாயத்துக்குப் பங்களிப்பைச் செய்யக்கூடிய புலம்பெயர்ந்தோரை புலம்பெயர அனுமதியுங்கள் என்கிறார் அவர்.
பிரித்தானியாவின் புகழ்பெற்ற, ஆடைகள், காலணிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை நிறுவனமான Next என்னும் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகிய Lord Wolfson என்பவர், பிரித்தானியாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்தல் கொள்கை பொருளாதார வளர்ச்சியை முடக்குகிறது
பிரித்தானியாவின் தற்போதைய புலம்பெயர்தல் கொள்கை பொருளாதார வளர்ச்சியை முடக்குவதாக அமைந்துள்ளதாகவும், பிரித்தானியாவில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அரசு கூடுதல் புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.
புலம்பெயர்தலை முறையாக கட்டுப்படுத்த ஆலோசனை
நம் நாட்டில் அழுகிக்கொண்டிருக்கும் பயிர்களை அறுவடை செய்வதற்காகவும், ஆட்கள் இல்லாததால் செயல்படாத நிலையில் இருக்கும் சேமிப்பகங்களில் பணியாற்றுவதற்காகவும் நம் நாட்டுக்கு வர மக்கள் காத்திருக்கிறார்கள். நாம் அவர்களை நாட்டுக்குள் விடமாட்டேன்கிறோம் என்கிறார் Lord Wolfson.
இப்போது பிரித்தானியர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்தல் குறித்து நடைமுறை பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த வேண்டியதுதான், ஆனால், எங்கு புலம்பெயர்தல் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கிறதோ, அங்கு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துங்கள், அதே நேரத்தில் சமுதாயத்துக்குப் பங்களிப்பைச் செய்யக்கூடிய புலம்பெயர்ந்தோரை புலம்பெயர அனுமதியுங்கள் என்கிறார் அவர்.
GETTY IMAGES