பிரித்தானியாவிடம் இருந்து ரகசியமாக இந்தியா பெற்றுள்ள நிதியுதவி: வாயைப்பிளக்க வைக்கும் தொகை
பிரித்தானிய பொதுமக்கள் வரிப்பணம் இந்தியாவுக்கு அளிப்பது தடுத்து நிறுத்தப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்திருந்தும் பெருந்தொகை நிதியுதவியாக அளிக்கப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
2.3 பில்லியன் பவுண்டுகள்
இந்த விவகாரம் தொடர்பில் தனியார் முன்னெடுத்த விசாரணையில், 2016 முதல் 2021 வரையான காலகட்டத்தில் சுமார் 2.3 பில்லியன் பவுண்டுகள் இந்தியாவுக்கு நிதியுதவியாக அளிக்கப்பட்டுள்ளது.
@ani
இதில், பெரும்பகுதி தொகையானது தேவையின்றி செலவிடப்பட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு பாரம்பரியமாக அளித்துவரும் நிதியுதவிகளை படிப்படியாக நிறுத்த 2012ல் பிரித்தானியா ஒப்புக்கொண்டது.
அத்துடன் இந்திய அரசாங்கத்திற்கு நேரிடையாக நிதியுதவி அளிப்பதை 2015 முதல் பிரித்தானியா நிறுதித்தியது. ஆனால் அதன் பின்னர் மறைமுகமாக பல்வேறு வழிகளில் நிதியுதவிகள் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
11வது இடத்தில் இந்தியா
மேலும், 2021ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், பிரித்தானியாவில் இருந்து அதிக நிதியுதவி பெறும் நாடுகளில் 11வது இடத்தில் இந்தியா வந்துள்ளதும், பங்களாதேஷ் மற்றும் கென்யாவை விட அதிகமாக நிதியுதவிகளை பெறுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
@AP
அத்துடன், இந்தியாவில் உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படாத, ஏழைகள் மிகுந்த பகுதிகளுக்கு நிதியுதவிகளை அளிப்பதில் பிரித்தானிய அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது.