புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளையும் நாடு கடத்த திட்டமிட்டுள்ள பிரித்தானியா?: வெளியாகியுள்ள ஆதாரம்...
சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் பிரித்தானியாவின் திட்டத்தின் கீழ், குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆம், ருவாண்டாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்று புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் தங்கவைக்கப்படுவதற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.
புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட உள்ள The Hope Hostel என்னும் தங்கும் விடுதி ஒன்றில், சிறிய கால்பந்து விளையாடும் இடம் மற்றும் கூடைப்பந்து விளையாடும் இடம் ஆகியவை தயாராகி வருகின்றன.
அந்த தங்கும் விடுதியின் மேலாளரான Elisee Kalyango என்பவர், புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் பயன்படுத்துவதற்கு வசதியாக அந்த விளையாடும் வசதிகள் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், குழந்தைகளுக்காக பொம்மைகளையும் வாங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வயதினரையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் தயாராக உள்ளோம் என்று Kalyango கூறுவதைப் பார்த்தால், நிச்சயம் புலம்பெயர்ந்தோருடன் அவர்களுடைய பிள்ளைகளையும் பிரித்தானியா நாடுகடத்தப்போவது உறுதி என்றே தோன்றுகிறது.