புலம்பெயர்தல் விடயத்தில் இரட்டை வேடம் போடும் பிரித்தானியா: உண்மை நிலை என்ன?
பிரித்தானிய அரசில் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் பலர், புலம்பெயர்ந்தவர்கள். குறிப்பாக, இந்திய வம்சாவளியினர். ஆனால், அப்படி முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகளே, புலம்பெயர்தலுக்கு எதிராக, குறிப்பிட்டுச் சொல்லும் வகையில், இந்திய புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதைக் குறித்து, தேர்தல் பிரச்சார நேரங்களில் மேடைப்பேச்சுகளின்போது முழங்குவதைப் போல பேசிவருகிறார்கள்.
முன்னாள் இந்நாள் உள்துறைச் செயலர்களின் கருத்துக்கள்
முன்பு, இந்திய வம்சாவளியினரான பிரீத்தி பட்டேல் உள்துறைச் செயலராக இருந்தபோது, அவரும் புலம்பெயர்தலுக்கு எதிராகத்தான் பேசி வந்தார், நடவடிக்கைகளும் எடுத்துவந்தார்.
தற்போது உள்துறைச் செயலராக இருக்கும் இந்திய வம்சாவளியினரான சுவெல்லா பிரேவர்மேனும் அதையேதான் செய்கிறார். பிரீத்தியாவது சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதைக் குறித்துதான் பேசிவந்தார். சுவெல்லா ஒரு படி மேலே போய், மொத்தமாகவே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறிவருகிறார்.
சுவெல்லாவின் கருத்துக்கள் நிஜத்தில் சாத்தியமா?
பிரித்தானியா என்று அல்ல, எந்த நாடானாலும், அதற்கு புலம்பெயர்தல் அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகம் ஒரு சமுதாயம், ஒரு நாடு அரிசி உற்பத்தி செய்யும், ஒரு நாடு எண்ணெய் உற்பத்தி செய்யும். இரண்டும் நான் உற்பத்தி செய்ததை நான் மட்டுமே வைத்துக்கொள்வேன், வேறு யாருக்கும் தரமாட்டேன் என்று சொல்ல முடியாது. அதனால், மற்ற நாட்டுக்கு பயனில்லை என்பதோடு, பொருட்களை தானே பதுக்கி வைத்துக்கொள்வதால், உற்பத்தி செய்த நாட்டுக்கும் பயனில்லாமல் போய்விடும்.
அரிசி உற்பத்தி செய்பவர், அரிசியைக் கொடுத்து எண்ணெயை வாங்கிக்கொள்ளவேண்டும். இது சந்தைக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் பொருந்தும்.
Getty Images
இன்று பல நாடுகளிடம் வளம் இருக்கிறது, வசதி இருக்கிறது, ஆனால் முக்கிய பணிகளைச் செய்ய பணியாளர்கள் இல்லை. ஆக, தகுதியுடைய பணியாளர்கள் புலம்பெயரவேண்டும், பணி செய்யவேண்டும், பதிலுக்கு, நாடுகள் தங்கள் வளத்தை, செல்வத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். இதுதான் நிதர்சனம்.
ஆனால், பிரித்தானியா போன்ற சில நாடுகள் புலம்பெயர்தலுக்கு எதிராக பேசிக்கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் சுவெல்லா ஆற்றிய உரை
மாநாடுகள் வந்துவிட்டால் போதும், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் பிரச்சார மேடை நினைவுக்கு வந்துவிடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் உரையாற்றிய சுவெல்லா, புலம்பெயர்தலுக்கெதிராக முழக்கமிட்டிருக்கிறார்.
ஒரு பெரிய கூட்டம் புலம்பெயர்வோர், சூறாவளியைப்போல பிரித்தானியாவுக்கு வர இருக்கிறார்கள், அதற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் அவர்களைத் தடுக்கமுடியும் என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார் சுவெல்லா.
the Quint
சுவெல்லாவின் பெற்றோரும் புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான் என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டக்கூடும் என்பதையும் நன்கறிந்த சுவெல்லா, 20ஆம் நூற்றாண்டிலும் இதேபோல ஒரு காற்று புலம்பெயர்ந்தோரை அடித்துக்கொண்டு வந்தது.
அதில் வந்தவர்கள்தான் என் பெற்றோரும். ஆனால், இப்போது அடிக்கவிருக்கும் சூறாவளியை ஒப்பிட்டால் அப்போது அடித்தது வெறும் காற்றுதான் என்று கூறியுள்ளார் அவர்.
ஏனென்றால், ஒரு ஏழை நாட்டிலிருந்து பணக்கார நாட்டுக்கு குடிபெயர்வது, இன்று பல பில்லியன் மக்களுக்கு வெறும் கனவல்ல, அது முழுமையாக சாத்தியமான விடயமே என்று கூறியுள்ளார் அவர்.
நிபுணர்கள் கருத்து
சுவெல்லாவின் கருத்தை பிரதமர் ரிஷியே விமர்சித்திருக்கிறார். ஏனென்றால், ரிஷியும் இந்திய வம்சாவளியினர்தான், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான்.
இந்நிலையில், சுவெல்லாவின் கருத்து குறித்து நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுவெல்லா, பிரித்தானியாவை பணக்கார நாடு, வல்லரசு நாடு என்றும், புலம்பெயர்வோர் எங்கிருந்து வருகிறார்களோ அந்த நாடுகளை ஏழை நாடுகள் என்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால், பிரித்தானியாவை வல்லரசாக்கவேண்டுமானால், மற்ற நாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்கள் வந்தால் மட்டுமே அது சாத்தியம் என்கிறார், புலம்பெயர்தல் சட்டத்தரணியான Yash Dubal.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, அது தொழில்நுட்பத்தில் வல்லரசாக வேண்டுமானால், அதற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் திறன்மிகுப் பணியாளர்கள் தேவை. அது மட்டுமல்ல, பிரித்தானியாவின் மருத்துவத்துறைக்கும், வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணிகளுக்கும் கூட போதுமான பணியாளர்கள் இல்லை, அதற்கும் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை எதிர்பார்க்கும் ஒரு நிலையே காணப்படுகிறது என்பதுதான் நிதர்சனம் என்கிறார் அவர்.
இது சுவெல்லாவுக்குத் தெரியாதா?
இதெல்லாம், உள்துறைச் செயலர் சுவெல்லாவுக்குத் தெரியாதா? நிச்சயம் தெரியும். ஆக, இது சுவெல்லாவின் புலம்பெயர்தல் கொள்கை அல்ல, அது அவரது மேடைப்பேச்சு மட்டுமே!
PHIL NOBLE
இதே சுவெல்லா நாளை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றால், அவரது நிலைப்பாட்டையே அவர் மாற்றிக்கொள்ள நேரிடலாம். அல்லது, அடுத்த தேர்தலில் சுவெல்லாவின், ரிஷியின், கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தால், சுவெல்லாவின் கருத்துக்கள் காணாமல்போயிருக்கும்.
ஒருவேளை, நாளை, பிரித்தானியாவில் புலம்பெயர்தலின் அளவு போதும், அதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்னும் ஒரு விவாதம் எழுமானால், அப்போது, புலம்பெயர்தல் பாதிக்கப்படலாம் என்கிறார் Yash Dubal.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |