இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரர் மரணம்: குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவின் கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றான இந்துஜா குடும்பத்தின் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீசந்த் ஹிந்துஜா
இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான ஸ்ரீசந்த் ஹிந்துஜாவின் பிள்ளைகள் ஷானு மற்றும் வினு குறித்த தகவலை அறிக்கையினூடாக தெரிவித்துள்ளனர். மே 17ம் திகதி ஸ்ரீசந்த் ஹிந்துஜா மரணமடைந்துள்ளதாகவும், தங்களது இரங்கலையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
@getty
மேலும், தொலைநோக்குப் பார்வை கொண்டவரான ஸ்ரீசந்த் ஹிந்துஜா, தொழில் மற்றும் வணிகம், மனிதாபிமானம் மற்றும் பரோபகாரி எனவும் குறிப்பிட்டுள்ளனர். கோடீஸ்வர தொழிலதிபரான ஸ்ரீசந்த் ஹிந்துஜா இறக்கும் போது டிமென்ஷியா நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜா தனது சகோதரர் கோபிசந்துடன் நான்காவது முறையாக 2022ல் முதலிடம் பிடித்தார். ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஹிந்துஜா சகோதரர்களின் மொத்த சொத்துமதிப்பு 28.5 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.
வங்கி, வணிக வாகன விற்பனை மற்றும் இரசாயனங்கள் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களை வைத்திருக்கும் இந்துஜா வணிகக் குழுமத்தின் தலைவராக இருந்தார் ஸ்ரீசந்த் ஹிந்துஜா.
பிரித்தானியாவிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு சொத்துக்கள் உள்ளன. மேலும் பக்கிங்ஹாம் அரண்மனை அருகாமையில் 18ம் நூற்றாண்டு மாளிகை ஒன்றை வாங்கியுள்ள ஹிந்துஜா குடும்பத்தினர், பெரும்பாலான நேரத்தை குறித்த மாளிகையிலேயே செலவிட்டுள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு
ஹிந்துஜா குடுமத்தில் சுமார் 150,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, சுவிஸ் வங்கியின் உரிமை தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு, ஹிந்துஜாவின் மருத்துவத் தேவைகளை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது எனவும் கூறப்படுகிறது.
@getty
2015ல், இந்துஜா வங்கியின் முழு உரிமையை நிலைநாட்ட தனது சகோதரர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுமூகமான முடிவுக்கு வந்ததாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.