பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் கடுங்கோபம்: ராஜகுடும்பத்திலிருந்து வெளியேறியதால் தொடரும் பிரச்சினைகள்
தங்கள் பிள்ளைகளுக்கு பட்டங்கள் கிடைக்காது என்பதால் இளவரசர் ஹரியும் மேகனும் கடுங்கோபம் அடைந்துள்ளார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பது, ஹரி மேகன் தம்பதியரின் கோபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் ராஜகுடும்பத்தை விட்டு தங்கள் சுயவிருப்பத்தின்பேரில் வெளியேறியதைத் தொடர்ந்து, அவர்களுடைய ஹிஸ் ராயல் ஹைனஸ், ஹெர் ராயல் ஹைனஸ் (His Royal Highness or Her Royal Highness, both abbreviated HRH) என்னும் பட்டங்கள் பறிக்கப்பட்டன.
முதலில் அதைக் குறித்து பெருமளவில் ஹரி மேகன் தம்பதியர் அலட்டிக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் அந்த பட்டங்கள் இல்லை என்னும் காரணம் உட்பட சில காரணங்களால் அவர்களுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பல இடங்களில் ராஜகுடும்பத்தினருக்கான பாதுகாப்பு முறையாக கிடைக்கவில்லை.
Credit: Alexi Lubomirski
அதனால் தம்பதியர் வருத்தம் அடைந்தார்கள்.
இந்நிலையில், தற்போது ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சி (3) மற்றும் லிலிபெட்டுக்கும் (1), ஹிஸ் ராயல் ஹைனஸ், ஹெர் ராயல் ஹைனஸ் என்னும் பட்டங்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: Getty
ஆகவே, தங்களைப் போலவே தங்கள் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஹரி மேகன் தம்பதியர் கடுங்கோபம் அடைந்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுக்கு, இளவரசர், இளவரசி என்னும் பட்டங்கள் கிடைக்கும் என உறுதியளிக்கப்படுள்ளது.
Credit: Getty - Contributor