உக்ரைனுக்கு உதவியாக 6,000 ஏவுகணைகளை அனுப்பும் பிரித்தானியா
பிரித்தானியா, உக்ரைனுக்கு கூடுதலாக 6,000 ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, டாங்குகளை எதிர்க்கக்கூடிய 4,000 ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6,000 ஏவுகணைகளை அனுப்ப பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
அந்த ஏவுகணைகளில் Javelin ஏவுகணைகள், NLAW என்னும் அடுத்த தலைமுறை டாங்குகளை எதிர்க்கக்கூடிய ஆயுதங்கள் ஆகியவையும் அடங்கும்.
Kyivஇல் ரஷ்யப் படைகளை எதிர்க்க ஆயுதங்கள் குறைந்துகொண்டே வருவதாக அச்சம் எழுந்துள்ள நிலையில், போரிஸ் ஜான்சனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், பிரித்தானியா, உக்ரைனுக்கு 25 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவியும் அனுப்ப உள்ளது.
பிரித்தானியாவின் இந்த நம்பிக்கையூட்டும் அறிவிப்பைத் தொடர்ந்து, பிரான்சும் ஜேர்மனியும் வாக்களித்தபடி உதவாமல் பின்வாங்குவதாக அச்சம் எழுந்துள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் தனக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.