பிரதமர் ரிஷி சுனக்கின் கூற்று பொய்யானது... பிரித்தானியாவில் ஒரே நாளில் நுழைந்த 545 புலம்பெயர் மக்கள்
சிறு படகுகள் ஊடாக புலம்பெயர் மக்களின் வருகை மொத்தமாக சரிவடைந்துள்ளது என பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ள நிலையில், மூன்று நாட்களில் மட்டும் 1,200 பேர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
545 புலம்பெயர் மக்கள்
இதில் திங்கட்கிழமை மட்டும் 545 புலம்பெயர் மக்கள் சிறு படகுகளில் பிரித்தானியா வந்தடைந்துள்ளதாக உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, வார இறுதி நாட்களில் மட்டும் மொத்தம் 703 பேர்கள் வந்துள்ளனர்.
@LNP
அதாவது கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து புலம்பெயர் மக்களின் வருகை மிக அதிகமாக காணப்படுவதாகவே இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனிடையே, சுமார் 200 பேருடன் பயணப்பட்டுள்ளதாகக் கருதப்படும் குறைந்தது நான்கு படகுகள் நேற்று எல்லைப் படைக் கப்பல்கள் மூலம் டோவரில் கொண்டு வரப்பட்டன.
மேலும், போர் சூழல் காரணமாக உலக முழுவதிலும் இருந்து 110 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளைவிட்டு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, பிரித்தானியாவில் இருந்து இந்த எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரினால் மட்டும் 5.7 மில்லியன் மக்கள்
போர் சூழல், துன்புறுத்தல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட காரணிகளாலையே பெரும்பாலான மக்கள் இடம்பெயர்வாதாக ஐக்கிய நாடுகள் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் போரினால் மட்டும் 5.7 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி வெளியேறியுள்ளனர். அத்துடன் சோமாலியா மற்றும் சூடான் நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே, தற்போது பிரித்தானியாவில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்கள் சிறு படகுகளில் வந்தடைவதாக உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.
92 நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று
கடந்த ஆண்டு புகலிடக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்த 92 நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என UNHCR குறிப்பிட்டுள்ளது.
சமீப நாட்களில், சிறு படகுகள் ஊடாக பிரித்தானியாவில் வந்தடையும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை சரிவடைந்ததாக பிரதமர் ரிஷி சுனக் விளம்பரம் செய்தது தற்போது பொய்யாகியுள்ளது என்றே கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை 8,858 புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |