38 புலம்பெயர்ந்தோரை நடுக்கடலில் தவிக்கவிட்டது பிரித்தானியா: பிரான்ஸ் குற்றச்சாட்டு
நடுக்கடலில் சிக்கித் தவித்த 38 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியா கைவிட்டதாகவும், தாங்கள் அவர்களைக் காப்பாற்றியதாகவும் பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் சிக்கித் தவித்த 38 புலம்பெயர்ந்தோர்
ஜனவரி மாதம் 2ஆம் திகதி, சிறு படகொன்று ஆங்கிலக்கால்வாயில் பயணிப்பதைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர், மாலை 5.30 மணியளவில் அந்த படகு, பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்தப் படகின் எஞ்சின் செயலிழந்ததாகவும், படகு தண்ணீரில் அடித்துச்செல்லப்படத் துவங்கியதைத் தாங்கள் கண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பிரித்தானிய பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினரும், கடலோரக் காவல் படையினரும் நிற்பதைக் கண்டு உடனே தாங்கள் ரேடியோ மூலம் அவர்களுக்கு அந்த படகு குறித்துத் தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கிறார் Rémi Vandeplanque என்னும் பிரான்ஸ் நாட்டு கடலோரக் காவல் படைவீரர்.
Photograph: Ben Stansall/AFP/Getty Images
புலம்பெயர்ந்தோரைக் கைவிட்ட பிரித்தானியர்கள்
பிரித்தானிய தரப்பிலிருந்து அந்த புலம்பெயர்ந்தோரைக் காப்பாற்ற சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் Rémi.
காற்றில் மீண்டும் அந்த படகு பிரான்ஸ் கடற்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. படகிலிருந்தவர்கள் பிரித்தானிய பகுதிக்கு படகைச் செலுத்தமுயன்றும் அவர்களால் முடியவில்லை.
அதற்குள் இரவு மணி 9.00 ஆக, படகிலிருந்தவர்கள் சோர்ந்துபோயிருக்கிறார்கள். குளிரும் பயமும் அவர்களை வாட்டத்துவங்கியுள்ளது.
ஆகவே, பிரான்ஸ் கடலோரக் காவல்படையினர் சென்று அந்த 38 புலம்பெயர்ந்தோரையும் மீட்டு அவர்களுக்கு போர்வை, உணவு மற்றும் அருந்த சூடான பானங்களும் கொடுத்ததாக தெரிவித்துள்ளார் Rémi.
பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 38 பேரை பிரித்தானிய கடலோரக் காவல்படையினர் கைவிட்டுவிட்டார்கள் என்கிறது பிரான்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.