48 மணிநேரம் தான்... அதற்குள் பின்வாங்காவிட்டால் இது தான் நடக்கும்! பிரான்ஸுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமம் தொடர்பாக விடுத்துள்ள அச்சுறுத்தல்களை 48 மணிநேரத்திற்குள் பிரான்ஸ் பின்வாங்க வேண்டும் என பிரித்தானியா வெளியுறவு செயலாளர் Liz Truss எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் உடனான மீன்பிடி உரிமம் தொடர்பான பிரச்சினை குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Liz Truss, சேனல் தீவுகள் மற்றும் எங்கள் மீன்பிடித் தொழிலுக்கு பிரான்ஸ் முற்றிலும் நியாயமற்ற அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது.
அவர்கள் அந்த அச்சுறுத்தல்களிலிருந்து பின்வாங்க வேண்டும், இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சட்டப்படடி நடவடிக்கை எடுப்போம்.
பிரான்ஸ் நியாயமற்ற முறையில் செயல்படுகிறார்கள். இந்த செயல்பாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரவில்லை.
யாராவது வர்த்தக ஒப்பந்தத்தில் நியாயமற்ற முறையில் செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு மற்றும் இழப்பீடு கோரலாம்.
பிரான்ஸ் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து பின்வாங்கவில்லை என்றால் இதை தான் நாங்கள் செய்யப்போகிறோம் என பிரித்தானியா வெளியுறவு செயலாளர் Liz Truss எச்சரிக்கை விடுத்துள்ளார்.