இந்தியாவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கும் பிரித்தானியா: இது எல்லோருக்கும் நல்ல செய்தி அல்ல!
பிரித்தானியா, இந்தியாவை தனது பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி, ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு பாதகமான செய்தியாகும்.
பாதுகாப்பான நாடுகள் பட்டியல் என்றால் என்ன?
பிரித்தானியாவின் பார்வையில் பாதுகாப்பான நாடு என்பது என்னவென்றால், அது, நிலையான நாடு, அங்கு மனித உரிமை மீறல்கள் பெருமளவில் இல்லை, அங்கு மக்கள் பாதுகாப்பாக வாழலாம் என்பதாகும்.
இது இந்தியா மீது எவ்வித தாக்கம் ஏற்படுத்தும்?
அதாவது, இந்தியா பாதுகாப்பான நாடு என கருதப்படும் நிலையில், பாதுகாப்பான நாட்டிலிருந்து எதற்காக மக்கள் பிரித்தானியாவுக்கு வந்து புகலிடம் கோரவேண்டும்?
REUTERS
ஆக, சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குச் செல்ல முற்படுவோருக்கு இது கெட்ட செய்தி. மேலும், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்கள், கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கோ அல்லது மூன்றாவது நாடு ஒன்றுக்கோ நாடுகடத்தப்படுவது இனி பிரித்தானியாவுக்கு எளிதான விடயமாகிவிடும்.
பாதுகாப்பான நாடுகளிலிருந்து அபாயகரமான முறையில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு பயணிப்போரை தடுத்து நிறுத்தியாகவேண்டும் என சமீபத்தில் பிரித்தானிய உள்துறைச் செயலரும், இந்திய வம்சாவளியினருமான சுவெல்லா பிரேவர்மேன் கூறியிருந்த நிலையில், நேற்று முன்தினம், பிரித்தானிய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |