பிரான்சிலிருந்து தாயைக் காண பிரித்தானியா சென்ற பெண்... கொரோனா பரிசோதனை தொடர்பில் குற்றச்சாட்டு
உடல் நலமில்லாமல் இருக்கும் தன் தாயைக் காண்பதற்காக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்றார் ஒரு பெண். பிரான்சிலுள்ள Béziers என்ற இடத்தில் வாழ்பவர் பிரித்தானிய குடியுரிமையும் கொண்டவரான Elizabeth Mackie (62). Elizabethஇன் தாயார் மிக சீரியஸான ஒரு பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவருக்கு உதவுவதற்காகவே Elizabeth பிரான்சிலிருந்து பிரித்தானியா சென்றார்.
ஆனால், அவர் பிரித்தானியா சென்றதும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்காக Elizabeth 946 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு வருபவர்கள் தனியார் நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற ஒரு விதிமுறை உள்ளது.
எங்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறும் Elizabeth, குடும்பத்தில் ஒரு அவசரம் என்பதற்காக பயணம் செய்யும்போது, எங்கே குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றெல்லாமா பார்த்துக்கொண்டிருக்க முடியும்? பக்கத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் சென்று முடிந்தவரை சீக்கிரமாக வேலையை முடிப்போம் என்றுதானே நினைப்போம் என்கிறார்.
இது ரொம்ப மோசம் என்று கூறும் Elizabeth, நான் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை குறைசொல்லவில்லை, அதன் விலையைப்பற்றித்தான் சொல்கிறேன் என்கிறார். அவசர அவசரமாக, உடல் நலமில்லாமல் இருப்பவரைக் காண வருபவரிடம் இப்படி கட்டணம் வாக்குவது அநியாயம் என்கிறார் அவர். பிரித்தானியாவின் பயண விதிகளின்படி, பிரான்ஸ் பிரித்தானியாவின் ஆம்பர் பட்டியலில் உள்ளது.
ஆகவே, பிரான்சிலிருந்து பிரித்தானியா வருவோர் 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதுடன், தனிமையிலிருக்கும் 2 மற்றும் 8ஆவது நாட்களில் கொரோனா பரிசோதனையும் செய்துகொள்ளவேண்டும் என்பது விதி.
அத்துடன், பிரித்தானியாவுக்கு வந்த நபர் பிரான்சுக்கு திரும்பிச் செல்ல விரும்பும்போது, அவர்கள் விமான பயணம் செய்ய தகுதி உடையவர்களா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, மீண்டும் பிரித்தானியாவில் ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
அதையும் தனியாரிடம்தான் வாங்கவேண்டும். அதே நேரத்தில், பிரெஞ்சு குடிமக்களுக்கும், வாழிட உரிமம் கொண்டவர்களுக்கும் பிரான்சில் கொரோனா பரிசோதனைகள் முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.