பிரித்தானிய இளம்பெண்ணுக்கு பிரான்சில் நிகழ்ந்த பயங்கரம்
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர், தன் வாழ்வில் மறக்கமுடியாத பயங்கர அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார்.
பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம்
பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த இளம்பெண் ஒருவர், தன் நண்பர்களுடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதை பாரீஸில் தன் நண்பர்களுடன் செலவிட்ட அந்த இளம்பெண், சனிக்கிழமை அதிகாலை, தான் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்வதற்காக டெக்ஸி ஒன்றை புக் செய்துள்ளார்.
அந்த இளம்பெண்ணை Bois de Boulogne என்ற இடத்துக்குக் கொண்டு சென்ற அந்த டெக்ஸியின் சாரதி, தனது காரில் வைத்தே பலமுறை அவரை வன்புணர்ந்துள்ளார்.
வாய்ப்புக் கிடைத்த நேரத்தில் காரின் கதவைத் திறந்த அந்த பெண், தப்பியோடி அருகிலிருந்த ஒரு வீட்டின் தோட்டத்துக்குள் சென்று பதுங்கியுள்ளார்.
சனிக்கிழமை காலை 7.30 மணியளவில், அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இளம்பெண் தன் வீட்டுத் தோட்டத்தில் அதிர்ச்சியில் உறைந்து அழுதவண்ணம் அமர்ந்திருப்பதைக் கண்டு, உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார்.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினருடன் அங்கு விரைந்த பொலிசார், அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள பொலிசார், குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |