இரத்த மழை... பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை
பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் ஒரு நாட்டில் இரத்த மழை பொழிய இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இரத்த மழை தொடர்பில் ஒரு எச்சரிக்கை
ஸ்பெயின் மற்றும் ஸ்பெயினுக்கு சொந்தமான Balearics தீவுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், அங்கு இரத்த மழை என்னும் அசாதாரண நிகழ்வை எதிர்கொள்ள நேரலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

உண்மையில், இந்த இரத்த மழைக்கும் உண்மையான இரத்தத்துக்கும் தொடர்பு கிடையாது.
சஹாரா பாலைவனத்திலிருந்து பலத்த காற்று சுமார் 180 மில்லியன் டன் அளவு வரையிலான தாதுக்கள் நிறைந்த தூசியை அள்ளிக்கொண்டு வரும்.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா
அந்த தூசியுடன் மழையும் சேரும்போது, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் மழை பெய்யும், அது பார்ப்பதற்கு இரத்தம் போல காட்சியளிப்பதால் இரத்த மழை என அழைக்கப்படுகிறது.

ஆக, ஸ்பெயினில் இந்த அசாதாரண நிகழ்வு நிகழ இருப்பதாலேயே சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடற்கரைகள் மற்றும் தண்ணீர் விளையாட்டுக்களை தவிர்க்குமாறு சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |