வெளிநாடொன்றில் வாழும் தன் மக்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து நைஜர் நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால், அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற பிரான்ஸ் முதலான நாடுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன?
பிரித்தானியாவைப் பொருத்தவரை, அது இன்னமும் தன் குடிமக்களை வெளியேற்றுவது தொடர்பில் எந்த திட்டத்தையும் முடிவு செய்யவில்லை.
ஆக, பிரித்தானிய குடிமக்கள், தாங்கள் இருக்கும் இடம் முதலான விவரங்களை பிரித்தானிய அரசிடம் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
REUTERS
அத்துடன், நைஜர் நாட்டிலிருக்கும் பிரித்தானியர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நைஜர் நாட்டுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் பிரித்தானியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
நைஜர் நாட்டில் எத்தனை பிரித்தானியர்கள் வாழ்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், 100க்கும் குறைவானவர்களே அங்கு வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |