ரஷ்யாவுக்கு பிரித்தானியா பகிரங்க எச்சரிக்கை!
உக்ரைன் விவகாரம் தொர்பில் ரஷ்யாவுக்கு பிரித்தானியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss கூறியதாவது, ரஷ்யா தனது அண்டை நாடுகளை சீர்குலைக்க நடத்தும் பிரச்சாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்.
ரஷ்யா அதன் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை நியாயப்படுத்த, உக்ரைனை ஒரு அச்சுறுத்தலாக பொய்யாக ஜோடித்துள்ளது.
ரஷ்யா தான் உக்ரைனை ஆக்கிரிமிக்க முயற்சிக்கிறது. நேட்டோ எப்போதும் ஒரு தற்காப்புக் கூட்டணியாக இருந்து வருகிறது.
இதற்கு மேல் உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவ முயன்றால், பெரிய விளைவுகளை சந்திக்கும்.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் விதிப்பது தொடர்பிலான பணிகளை பிரித்தானியா அதன் நட்பு நாடுகளுடன் முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யாவின் அச்சுறுத்தும் நடத்தைக்கு எதிராக நேட்டோ ஒன்றுபட்டிருப்பது மிகவும் முக்கியமானது என்று Truss கூறினார்.