சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை

Corona United Kingdom Britain
By Balamanuvelan Jan 10, 2022 06:56 AM GMT
Report

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு திருப்ப ஆவன செய்யவேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய கல்வி அமைச்சரான Nadhim Zahawi, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார்.

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.

அதாவது, கொரோனாவிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவோம் என்று அவர் கூறாமல், கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளும் ஒரு சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கமுடியும் என்று கூறியுள்ளார் அவர்.

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை | Britain Was The First Country Toreturn To Normalcy

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த Nadhim Zahawi, உலகம் முழுவதும் காணப்படும் ஒரு கொள்ளைநோயிலிருந்து, உலகின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் தொற்றுநோய் என்ற நிலைக்கு மாறுவது எப்படி என்பதை (pandemic to endemic) உலகுக்குக் காட்டும் முதல் பெரிய நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா இருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீண்ட கால கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், கொரோனாவுடன் வாழ்வது எப்படி என்பது குறித்த திட்டங்களை தீட்டி வருவதாகவும், அவை மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை | Britain Was The First Country Toreturn To Normalcy

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, பிரித்தானியாவில், புதிதாக 141,472 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், முந்தைய ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 151,663 என்பதால், நேற்றைய எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 6.7 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 32.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி 73 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது 97 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை | Britain Was The First Country Toreturn To Normalcy

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US