மக்களுக்காக வீதியில் இறங்கி வியாபாரியாக மாறிய பிரித்தானிய வருங்கால மன்னர்... நெகிழவைத்துள்ள புகைப்படம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பத்திரிகை ஒன்றை, வீதியில் இறங்கி விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி மக்களை நெகிழவைத்துள்ளது.
லண்டனில், ஒரு வியாபாரிக்குரிய உடை மற்றும் தொப்பி அணிந்து Big Issue என்னும் பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்த நபரை உற்றுக்கவனித்த ஒருவர், அது இளவரசர் வில்லியம் என்று தெரிந்ததும் தொலைவிலிருந்து அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.
அதை கவனித்த இளவரசர் வில்லியம், அவரை நெருங்கி ஒரு பத்திரிகை வாங்கிக்கொள்ளமுடியுமா என்று கேட்டாராம். அதற்கு அவர், என்னிடம் சில்லறை இல்லையே என்று கூற, உடனடியாக ஒரு கைதேர்ந்த வியாபாரியைப்போல, மொபைல் கார்டு இயந்திரம் ஒன்றைக் கொடுத்து இதன் மூலம் பணம் செலுத்தலாமே என்றாராம் வில்லியம் சின்சியராக!
வில்லியம் பத்திரிகை விற்கும் படம் சமூக ஊடகம் ஒன்றில் வெளியாக, அதை கவனித்த மக்கள், நம் எதிர்கால மன்னர் எவ்வளவு எளிமையானவர் என்று நெகிழ்கிறார்களாம்.
Wills goes incognito: Prince William goes undercover as a Big Issue seller in Westminster https://t.co/7CBQnll1Gt pic.twitter.com/vqihPJ9u9O
— Daily Mail Online (@MailOnline) June 9, 2022